உத்தரப்பிரதேச மாநிலம் மத்தூரா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், ஜூலை 18-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரண்டு பெண்கள் வழக்கறிஞர்களுக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டது. ஒரு சேம்பர் விவகாரத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியுள்ள இந்தக் காட்சிகள், அருகிலிருந்தவர்கள் எடுத்த வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வீடியோவில், கருப்பு பேண்ட் அணிந்த ஒரு வழக்கறிஞர், பச்சை குர்தா அணிந்த மற்றொரு வழக்கறிஞரிடம் சண்டை போட தொடங்குகிறார். ஆனால்,  வழக்கறிஞர் தன்னை தாக்க வந்த அவரைத் தடுத்ததோடு, அவரின் முடியை இழுத்து கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.

பின்னர், மூன்றாவது பெண் ஒருவர், வழக்கறிஞருடன் சேர்ந்து, கருப்பு பேண்ட் அணிந்த வழக்கறிஞரை தரையில் தள்ளி இழுத்து தாக்குகிறார்கள். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், அருகில் நிற்கும் மற்றவர்கள் யாரும் இந்த சண்டையை தடுக்க முயற்சிக்கவில்லை.

இந்த சம்பவம் மத்தூரா மாவட்டத்தின் சதார் பஜார் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள நீதிமன்ற வளாகத்திலேயே நிகழ்ந்துள்ளது. ‘பாரத் சமாசார்’ செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, வழக்கறிஞர்களுக்கிடையே ஏற்பட்ட சேம்பர் உரிமைத் தகராறே இந்த மோதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக, இவ்வருடம் பிப்ரவரியில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் உள்ள விற்பனை வரி அலுவலகம் அருகிலும் வழக்கறிஞர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டிருந்தது.

மோஹன் நகர் பகுதியில் நடந்த இந்த சண்டையும் வீடியோவாக பதிவு செய்யபட்டு, இணையத்தில் பரவி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்திலும் ஒரு பெண் வழக்கறிஞர் காயமடைந்து, ரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டார். அவர்களுக்கிடையே ஒரு கிளையன்டை மையமாகக் கொண்டே சண்டை ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது.