உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்லும் நிலையில் அங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு மிகவும் பிரபலம். இந்த லட்டு ஒன்று 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தின் போது திருப்பதி லட்டுவில் நெய்க்கு பதிலாக விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசின் ஆய்வகம் நடத்திய சோதனையில் விலங்கின் கொழுப்பு லட்டுவில் கலக்கப்பட்டிருந்தது உறுதியானது.

இந்த ரிப்போர்ட் நேற்று வெளியான நிலையில் மாட்டிறைச்சி, பன்றியின் கொழுப்பு, மீன் எண்ணெய், பாமாயில், ஆலிவ் ஆயில், காய்கறி கொழுப்புகள் போன்றவைகள் இருந்தது தெரிய வந்தது. இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த ஆந்திரா ஐடி துறை அமைச்சர் நாரா லோகேஷ் திருப்பதி லட்டுவில் பன்றி இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி கொழுப்பு இருந்தது உண்மைதான் என்று கூறியுள்ளார். மேலும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆதாரம் இல்லாமல் எதையும் பேச மாட்டார் என்றும் கூறியுள்ளார். ஆந்திர லட்டு தொடர்பாக எழுந்த சர்ச்சை அந்த மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எது.