
இஸ்ரேல் முதலில் காசா மீது போர் தொடுத்த நிலையில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
அதோடு ஹிஸ்புல்லா அமைப்பின் கமெண்டோ படைப்பிரிவு தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட நிலையில் தற்போது ஏமன் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் மூலம் தன்னுடைய எதிரிகளை ஒட்டுமொத்தமாக திர்த்துக்கட்டும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது முதலில் பாலஸ்தீனத்தின் காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தற்போது ஏமன் மீதும் நேற்று இரவு முதல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது.
அவர்கள் கௌவுத்தி கிளர்ச்சி படையினரை குறி வைத்து கொடூர வானொலி தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 3 கௌத்தி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் 87 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.