காசாவில் கடந்த 16 நாட்களில் நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் 14,000 குழந்தைகளும் பெண்களும் படுகாயம் அடைந்துள்ளதாகவும்,  அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு மருத்துவ உதவிகளோ,  மருத்துவர்கள் உரிய எண்ணிக்கையில் இல்ல. மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

கிருமிநாசினிக்கு பதிலாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் வினிகரை பயன்படுத்துவதாகவும் வேதனையோடு அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில்தான் எகிப்து எல்லையான ரஃபா நகரத்தில் இருந்து மூன்றாவது நிவாரண குழு அடங்கிய லாரிகள் உள்ளே காசா உள்ளே நுழைந்திருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நேற்று 17 லாரிகளும்,  அதற்கு முன்பு 20 லாரிகளும் மொத்தமாக 37 லாரிகள் சென்ற நிலையில் இன்று மேலும் ஒரு குழு சென்றுள்ளது.இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு சரியாக போய் சேருகிறதா ? அவர்களுக்கு உதவிகள் செய்யப்படுகிறதா ? என்கின்ற விவரம் சரிவர தெரியவில்லை என்கின்ற தகவல்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.