
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 17வது நாளை எட்டி வரும் நிலையில் காசா நகரத்தில் வடக்கு பகுதியில் குறிப்பாக ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினருடைய நிலைகள், அவருடைய ஆயுத கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. 320 கட்டிடங்கள், நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான இலக்குகள் திட்டமிட்டது தகர்த்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஹமாஸ்-க்கு இடையேயான இந்த போரில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப் படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவே தரைவழி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலிய படைகள் கான் யூனிஸ் நகரத்தை நெருங்கி
செல்லும் போது ஹமாஸ் அமைப்பினர் தரை வழி தாக்குதல் நிகழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல்முறையாக ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் தரைப்படையினருக்கும் இடையே நேற்று இரவு போர் நிலை முற்றிய நிலையில் ஒரு பில்டோசர் மற்றும் இஸ்ரேல் படையின் டேங்கிகளை ஹமாஸ் அமைப்பினர் அழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் படையினர் பின் வாங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.இஸ்ரேலிய அதிபர் பெஞ்சமின் தெந்தான்யாகு சர்வதேச நாடுகளில் இருந்து வரும் அழுத்தத்தின் காரணமாக தற்போது தரைப்படை தாக்குதலை தொடர விரும்பவில்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது.