காசாவில் ஒரே நாளில் 320 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் விண்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புகளின் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்புகளின் பயிற்சி மையங்கள், சுரங்கப்பாதைகள்,  தலைமை இடங்கள் ஆகியவையும் குறிவைக்கப்பட்டிருக்கின்றன. மனிதாபிமான உதவிகளுடன் காசா நகருக்குள் செல்லும் லாரிகளை இஸ்ரேல் ராணுவம் பரிசோதித்து வருகின்றது. காசா எல்லையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.