இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 17 நாட்களாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் மீது ஏழாம் தேதி ஏராளமான ராக்கெட் குண்டுகளை வீசியும் அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து பலரை தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டது. இந்த சம்பவத்தில் 260 பேர் கொல்லப்பட்ட நிலையில் 210 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இந்த போரில் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் யஹலோம் பிரிவினர் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பகுதியில் மீதமுள்ள வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது. அதாவது ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் அவர்களால் கொல்லப்பட்ட நபர்களின் உடல்களில் வெடிகுண்டுகளை இணைத்துவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ஐ டி எப் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு புகைப்படத்தில் பள்ளி குழந்தை ஒன்றின் பேக்கில் 7 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது. ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் வெடிக்கும் அந்த வெடிகுண்டை யாரேனும் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் ஹமாஸ் அமைப்பு விட்டு சென்றுள்ளது. ஹமாஸ் கையாண்ட கொடூர தந்திரங்களில் ஒன்றாக இது இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.