இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, எதிர்க்கட்சித் தலைவர் பென்னி இடையான பேச்சு வார்த்தைக்கு பின் அறிவிப்பு. யூத மக்களின் முன்னேற்றத்திற்காக அவசரநிலை பிரகடனப் படுத்தி இருப்பதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

இஸ்ரேலில் போர் மேலாண்மை அமைச்சரவை அமைப்பு:

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போர் மேலாண்மை அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. போர் மேலாண்மை அமைச்சரவையில் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், தேசிய ஒருங்கிணைப்பு தலைவர் இடம் பெறுவர். எதிர்க்கட்சி தரப்பில் இலாக்கா இல்லாத அமைச்சர்கள் ஐந்து பேர் போர் மேலாண்மை அமைச்சரவையில் இடம் பெறுவர்.

இஸ்ரேல் பிரதமருக்கு உச்சபட்ச அதிகாரம்:

போர் மேலாண்மை அமைச்சரவையை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமருக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.