இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளிகள் நடத்தும் இந்த போரில் நாங்கள் துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 9ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்று வருகிறது. வெளியுறவுத் துறை அதிகாரிகளோடு அமெரிக்க அதிபர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பயங்கரவாதத்தை எந்த வகையிலும் நியப்படுத்த முடியாது. இஸ்ரேலுக்கு துணை நிற்போம். இஸ்ரேல் மக்களுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பென்டகன் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகத்திலும்  இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்தும், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தான் இஸ்ரேலில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதிக்கு விமானம் தாங்கிய போர்க்கப்பல் அமெரிக்க ராணுவத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது காசா நகரத்தை அமெரிக்க போர்க்கப்பல்,  விமானங்கள்  முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலினுடைய இறையாண்மையை காப்பதற்காக நாங்கள் என்றும் துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, யூகே, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ச் உள்ளிட்ட ஐந்து நாடுகள் இஸ்ரேலை காப்பாற்றுவதற்காக இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ்  நடத்தும் இந்த போரில் துணை நிற்பதாக தெரிவித்துள்ளனர்.

மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில்,  கிழக்கு நாடுகள் குறிப்பாக ஈரான், எகிப்து, லபடான், ஜோடான், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தில் செயல்படும் போராளி குழுக்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ளன. மேலும் ரஷ்யா மற்றும் சீனாவின் உடைய நிலைப்பாட்டை பொருத்து இஸ்ரேல் பாலஸ்தீன போர் மேலும் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.