ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி மண்டலம், குரூகல்லு கிராமத்தில் நடந்த ஒரு சாலை விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பொதுமக்களின் அலட்சியம் குறித்துப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிவேகமாக வந்த ஒரு லாரியை, இருசக்கர வாகனத்தில் சென்றவர் இடதுபுறமாக முந்திச் செல்ல முயன்றபோது, சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் சிக்கி, நிலைதடுமாறி லாரியின் பின்சக்கரங்களுக்கு அடியில் விழுந்தார்.
31 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், லாரி மோதிய வேகத்தில் கீழே விழுந்த அந்த நபர், தலையிலும் உடலின் மேற்பகுதியிலும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
మనిషి ప్రాణం పోతున్నా పట్టించుకొని సమాజం
గుంటూరు జిల్లా కూరగల్లులో ఓవర్ టేక్ చేస్తూ లారీ కింద పడ్డ బైకర్
బైకర్ తలపై నుండి దూసుకెళ్లిన లారీ రెండు టైర్లు
తీవ్ర గాయాలతో కొట్టుమిట్టాడుతున్నా చూస్తూ ఉన్నారే కానీ పట్టించుకొని జనం
తీవ్ర గాయాలతో కొట్టుమిట్టాడుతూ ప్రాణాలు వదిలిన బైకర్ pic.twitter.com/iBnPHob4QX
— Telugu Scribe (@TeluguScribe) November 18, 2025
ஆனால், இதை அந்தப் பாதையில் சென்ற பலரும் வேடிக்கை பார்த்ததுடன், உதவி செய்யவோ, ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுக்கவோ முன்வரவில்லை.
“ஒருவர் இறக்கும்போதும் சமுதாயம் கவலைப்படுவதில்லை” என்று இணையவாசிகள் பலரும் சமூகத்தின் இந்த அலட்சியப் போக்கைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
