குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண், குடும்பப் பிரச்சினை காரணமாக அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனால் கடந்த அக்டோபர் மாதம் சபர்மதி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையில் இருந்த அந்தப் பெண் மருந்துகளின் தாக்கத்தால் அரை மயக்கத்தில் இருந்துள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மருத்துவமனை ஊழியர் ஒருவர், அக்டோபர் 20-ம் தேதி அதிகாலையில் அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். திடீரென விழிப்பு வந்த அந்தப் பெண் கூச்சலிடவே, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, சம்பவம் குறித்துக் கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி (CCTV) காட்சிகளைக் காட்ட மறுத்து இழுத்தடித்துள்ளனர்.

மகளின் உடல்நிலை மோசமானதால், அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது உடல்நலம் தேறிய அந்தப் பெண், தைரியமாக முன்வந்து சபர்மதி போலீசில் புகார் அளித்துள்ளார்.