தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் சைரன், மாமன்னண் மற்றும் ரகு தாத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான தசரா திரைப்படம் 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளி பருவ நண்பர் ஒருவரை காதலிப்பதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளிவந்தது.

ஆனால் இதற்கு கீர்த்தி சுரேஷின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளிப்பருவ நண்பரும் தொழிலதிபருமான ஃபர்கான் என்பவர் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷின் காதலரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் பள்ளி பருவ நண்பர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியானதால் தற்போது ஃபர்கானை தான் அவர் காதலிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.