பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் ஹீரோவாகவும் திரிஷா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். அதன் பிறகு அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் மற்றும் கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நடிகர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் நடிப்பதாக ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இதே போன்று தற்போது லியோ படத்திலும் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.