குடும்பத்தில் ஏற்பட்ட சிறிய வாய்த்தகராறு, கணவனை கத்தியால் குத்தும் கொடூர சம்பவமாக மாறி, சமூக வலைதளங்களை உலுக்கியுள்ளது. “நமகீன்” என்ற சிற்றுண்டி குறித்து ஏற்பட்ட வாக்குவாதம், அந்த பெண்ணின் திடீர் கொந்தளிப்பால் கணவனின் மீது கத்தி வீசும் அதிர்ச்சி நிகழ்வாக மாரியது.

இந்த நேரத்தில், அவர்களது சிறுகுழந்தை கதறி அழும்காட்சியும், தாயின் கையை பிடித்து தடுத்திட முயற்சிக்கும் துடிப்பும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில்  வெளியிடப்பட்டதும், நாட்டெங்கும் பரவியது. வீடியோவில், அந்த பெண் எந்த தயக்கமுமின்றி கணவனின் பக்கவாட்டில் கத்தியால் குத்துவதும், அவரது முகத்தில் எந்த அச்சமோ பயமோ இல்லாமல் நின்றிருப்பதும் தெளிவாக தெரிகிறது. இந்த காட்சிகளைப் பார்த்த நெட்டிசன்கள் ஆவேசம், கோபம், பயம் ஆகிய உணர்வுகளில் மூழ்கியுள்ளனர்.

சம்பவத்துக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் இது குறித்து பல்வேறு கருத்துகள் பரவியுள்ளன. “இந்த நாட்டுல ஒவ்வொரு நாளும் ஒரு ஆண்மீது அத்துமீறல் நடந்தே தீருது” என ஒருவர் வேதனையுடன் கூறியிருந்தார்.

“குழந்தைக்கு ஏற்பட்ட மன உளைச்சல் தான் இதுலயே பெரிய பாதிப்பு” என மற்றொருவர் பகிர்ந்திருந்தார். ஒரு சாதாரண நமகீன் விவகாரம், குடும்பத்தில் இவ்வளவு பெரிய கலவரத்துக்கும், குழந்தையின் மனத்தில் நீங்காத காயங்களுக்கும் வழிவகுப்பது கவலையளிக்கிறது. தற்போது இந்த வீடியோவால் குடும்ப பாதுகாப்பு, சட்டத்தின் செயற்பாடு மற்றும் சமூக நம்பிக்கைகள் குறித்து புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.