இந்தோனேசியாவில் சமீபத்தில் வீசிய சென்யார் புயல் மற்றும் வெள்ளத்தால் மக்கள் துயரத்திற்கு ஆளான நிலையில், தற்போது இணையத்தில் ஒரு வீடியோ தீயாய் பரவி வருகிறது.
வெள்ள நீரில் தத்தளிக்கும் ஒரு புலியை, அங்கு நின்றிருந்த யானை ஒன்று தனது தும்பிக்கை மூலம் தூக்கி, தனது முதுகில் ஏற்றித் தப்பிக்க வைப்பது போன்ற காட்சிகள் அதில் உள்ளன.
View this post on Instagram
இதைப் பார்த்த பலரும், “விலங்குகளுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட மனிதர்களுக்கு இல்லையே” என நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வந்தனர்.
சுமார் 5 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோவை உன்னிப்பாகக் கவனித்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நெட்டிசன்கள், இது முற்றிலும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று ஆதாரங்களுடன் நிரூபித்து வருகின்றனர்.
வீடியோவில் வரும் நீரின் வேகம் மற்றும் உருவங்கள் ஏஐ முறையில் வடிவமைக்கப்பட்டது போலத் தெரிவதாகப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். “பார்க்க அழகாக இருந்தாலும், இது போன்ற போலியான வீடியோக்களைப் பரப்பி மக்களை ஏமாற்ற வேண்டாம்” எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
