சமூக வலைதளங்களில் தற்போது ஒரு திகிலூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆள் அரவமற்ற ஒரு காட்டுப் பகுதியில், காரை நிறுத்திவிட்டு ஒரு நபர் கீழே இறங்குகிறார்.

அப்போது புதருக்குள் மறைந்திருந்த ஒரு படுபயங்கர புலி, மின்னல் வேகத்தில் வந்து அந்த நபரைத் தாக்கி, தரதரவென இழுத்துச் செல்கிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் “ஆபத்தான காட்டுப் பகுதிகளில் காரை விட்டு இறங்காதீர்கள்” என எச்சரித்துத் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை உன்னிப்பாக ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடியோவில் தாக்கப்படும் நபர் ஒரு தென்னாப்பிரிக்கர் போலத் தெரிகிறார்.

ஆனால், அந்த வீடியோவின் பின்னணியில் “புலி வந்துவிட்டது, ஓடுங்கள், தடியை எடுங்கள்” எனப் பலரும் இந்தியில் கத்துவது தெளிவாகக் கேட்கிறது.

ஒருவேளை அங்கு மக்கள் கூட்டம் இருந்திருந்தால் புலி அங்கு வந்திருக்காது. மேலும், காட்சிகளின் அசைவுகள் மற்றும் ஒலிகளின் முரண்பாடுகளை வைத்துப் பார்க்கும்போது, இதுவும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ என்பது உறுதியாகியுள்ளது.