நொய்டாவில் பொறியாளராகப் பணியாற்றி வரும் நீலு குமாரி என்பவருக்கு நேர்ந்துள்ள இந்தத் துயரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் மூலம் அறிமுகமான முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்த நவநீத் ராஜ் என்பவரை, கடந்த 2024-ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் நீலு திருமணம் செய்துகொண்டார்.

திருமணமான சில மாதங்களிலேயே நீலுவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகுதான் நவநீத்தின் சுயரூபம் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

“ரூ. 10 லட்சம் வரதட்சணை வேண்டும்” என நீலுவை சித்ரவதை செய்யத் தொடங்கியுள்ளார். விசாரணையில், நவநீத் ஏற்கனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவரை ஏமாற்றியது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி, நீலுவிடம் வரதட்சணை கிடைக்காத ஆத்திரத்தில், தற்போது ஷிவானி என்ற மூன்றாவது பெண்ணையும் அவர் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நீலு, தனது தாயுடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.