திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே சின்னபாண்டி(30), பானுப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சின்னபாண்டி டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரணித் என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த 26 ஆம் தேதி அன்று சளி பிடித்துள்ளது.

இதன் காரணமாக பெற்றோர் அந்த குழந்தைக்கு அருகில் உள்ள கடையில் சளி மருந்து வாங்கிக் கொடுத்து குழந்தையை தூங்க வைத்துள்ளனர். அதன் பிறகு அதிகாலை 4 மணிக்கு குழந்தைக்கு கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர், குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.