சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வினோதமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது ஒரு நபர் தனது வீட்டு குளியலறையில் இருந்த பல்லியின் முதுகில் சிறிய ரக கேமராவைப் பொருத்தி அதன் நடமாட்டத்தைப் பதிவு செய்துள்ள வீடியோ இணையவாசிகளை உறைய வைத்துள்ளது. அந்தப் பல்லி வீட்டின் தரை மற்றும் சுவர்களில் வேகமாக ஊர்ந்து சென்று, மனிதர்களால் பார்க்க முடியாத ஒரு ரகசிய இடத்திற்குச் செல்வதும், அங்கு அதன் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான பல்லிகள் இருப்பதும் கேமராவில் பதிவாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sheikh Abdullah (@rjk145s)

குறிப்பாக ஒரு கரப்பான் பூச்சியை உண்பதற்காக பல பல்லிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ள நிலையில், அந்த வீட்டில் இவ்வளவு பல்லிகள் இருப்பதைப் பார்த்து பயந்துபோன பலரும் இது வீடா அல்லது பல்லிகள் வளர்க்கும் பண்ணையா எனத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.