பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறுகையில் தமிழ்நாட்டின் உள்ள புகழ்பெற்ற கோவில் பிரசாதம் குறித்து இயக்குனர் மோகன் ஜி பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்டர்வியூ கொடுத்துள்ளார். இதனை தவறுதலாக புரிந்து கொண்ட திருச்சி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அவர் அளித்த பேட்டியில் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது எனவும் கூறியிருந்தார்.
அந்த பேட்டியில் புகழ்பெற்ற கோவில் பிரசாதத்தில் ஆண்மை குறைவு மாத்திரைகள் கலக்கப்படுவதாகவும் பின்னர் அந்த பிரசாதம் தரமற்றதை அறிந்து அழிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன என தெரிவித்துள்ளார்.இதற்கு எந்த ஒரு ஆதாரம் இல்லை என்பதால் செய்தியாளர்களை சந்தித்து பேசவில்லை என்றும் கூறினார். இந்த தகவல்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்த மர்ம நபர்கள் செய்த செயல் என்று தெரிகிறது. அரசும் அதிகாரிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அவர் கூறியிருக்கிறார்.