பெங்களூருவில் வெறும் இருமல் சத்தத்திற்காக ஒரு மனிதனின் உயிரே பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நபர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் தொடர்ச்சியாக இருமல் ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவு நேரத்தில் அவர் இருமிய சத்தம் அண்டை வீட்டில் வசிப்பவர்களுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், இருமல் சத்தம் தங்களைத் தூங்க விடாமல் தொந்தரவு செய்வதாகக் கூறி அந்த நபருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அண்டை வீட்டார் அந்த நபரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒரு சிறிய இருமலுக்காக மனிதநேயமே இல்லாமல் அண்டை வீட்டார் செய்த இந்த வெறிச்செயல் பெங்களூரு மக்களைப் பதற வைத்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அண்டை வீட்டைச் சேர்ந்தவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
