சேலத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் பாலமுருகன், பெங்களூருவில் வங்கி உதவி மேலாளராக இருந்த தனது மனைவி புவனேஸ்வரியைச் சுட்டுக் கொன்ற வழக்கில் கைதாகியுள்ளார்.
சந்தேகப் புத்தியால் மனைவியைக் கொடுமைப்படுத்தியதால், புவனேஸ்வரி அவரைப் பிரிந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், சினிமாவில் வருவது போலத் திட்டமிட்டுத் தனது மனைவியைத் தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மனைவியைக் கொல்ல பாலமுருகன் செய்த ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் அதிர்ச்சியைத் தருகின்றன. துப்பாக்கி வாங்குவதற்காக மட்டும் இவர் 3 முறை பீகார் மாநிலத்திற்குச் சென்று வந்துள்ளார்.
அங்கு 15 நாட்கள் தங்கியிருந்து, துப்பாக்கியை எப்படிக் கையாளுவது மற்றும் குறிதவறாமல் சுடுவது எப்படி எனத் தீவிரப் பயிற்சி எடுத்துள்ளார்.
முதலில் சேலத்தைச் சேர்ந்த கூலிப்படையை ஏவி மனைவியைக் கொல்ல முயன்றுள்ளார்; அது தோல்வியடைந்த பிறகே அவரே களத்தில் இறங்கி சுட்டுக் கொன்றுள்ளார்.
தற்போது பாலமுருகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உதவிய சேலம் கூலிப்படையினரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
