சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், தற்போது பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று மருத்துவரின் கத்தரிக்கோலை இறுகப் பற்றியிருக்கும் காட்சிகள் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
Born braveheart! ❤️ pic.twitter.com/Ta0xhDnOlG
— news for you (@newsforyou36351) January 24, 2026
மருத்துவமனையின் பிரசவ அறையில் எடுக்கப்பட்ட இந்தக் காணொளியில், ஒரு சிறிய மருத்துவத் தட்டில் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பச்சிளம் குழந்தை, மருத்துவர்கள் பயன்படுத்தும் கத்தரிக்கோலைத் தனது பிஞ்சுக்கைகளால் விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதை மிரட்சியுடன் காண முடிகிறது.
செவிலியர் ஒருவர் குழந்தையின் உடலைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, மற்றொரு செவிலியர் அக்குழந்தையின் கையில் இருக்கும் கத்தரிக்கோலை வாங்க முயற்சி செய்கிறார். ஆனால், அந்தப் பிஞ்சு குழந்தை தனது பிடியைத் தளர்த்தாமல் கத்தரிக்கோலைத் தர மறுப்பதும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு செவிலியர் அதனை மீட்டு எடுப்பதும் பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.
துணிச்சலான இதயம் கொண்ட குழந்தை என்ற குறிப்புடன் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளி, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
