அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் அதிமுக ஜெயிப்பது என்பதுதான் இலக்கு. இப்போது கடுமையான சோதனைக்குரிய காலமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  தொண்டர்களும், நாங்கள் பார்க்கிறோம். எங்கள் பக்கம் இருக்கின்ற… எங்களோடு இருந்து… எங்களோடு பயணித்தவர்கள் எதிர் தரப்பில் நின்று கொண்டு,  இரட்டை இலை சின்னத்தை முடக்குவது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பலவீனமாக்குவது போன்றதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே அதை முறியடிப்பதற்கு நாங்கள் அரசியல் நகர்தலை,  நகர்த்தலை செய்ய வேண்டிய கட்டாயத்தில்  இருக்கின்றோம். கமலாலயத்துக்கு போகின்றோம் என்று சொன்னால்,  நாடாளுமன்ற தேர்தலில்…  சட்டமன்ற பொதுத்தேர்தலில் அவர்களோடு கூட்டணியோடு நாங்கள் பயணித்தோம். இப்போதும் அந்த கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆகவே நீங்கள் எங்கள் பக்கம் கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என்கின்ற கோரிக்கை. எதிர் தரப்பு ( ஓபிஎஸ்) பாஜக இந்த தேர்தலில் நின்றால், நாங்கள் ஆதரிப்போம் என்கின்ற கோஷத்தை எழுப்பி விட்டார்கள். அதை முறியடிப்பதற்கு நாங்கள் அங்கே போனோம் என தெரிவித்தார்.

உடனே நெறியாளர்: பாஜக அலுவலகம் போய் கேட்டீர்களே.. மதித்தார்களா பாஜக என்று கேட்க.. வைக்கச்செல்வன், அரசியல் என்பது சகிப்புத்தன்மை தானே. அவமானங்கள் எவ்வளவு நேர்ந்தாலும், பொதுச் சேவையில் சகித்துக் கொண்டிருக்க வேண்டும். மதியாதார் தலைவாசல் மிதியாதே  எனும் தமிழ் பண்பாடு முக்கியம். நாம் வீரத்தோடு இருக்க வேண்டும். தன்மானத்தோடு இருக்க வேண்டும். சுயமரியாதையோடு இருக்க வேண்டும்.

இருந்தபோதிலும் கூட சில சமரசத்திற்கு ஆர்ப்படுகிறபோது,  சமாதானத்திற்கு ஆர்ப்படுகிற போது தான் தேர்தல் அரசியலே. இது பாஜகவிடம் சரண்டர் கிடையாது. சரண்டர் ஆக வேண்டிய கட்டாயமே கிடையாது. எந்த இடத்திலும் நாங்கள் சரண்டர் ஆனதே கிடையாது. எல்லாரையும் அரவணைத்து. ஏனென்றால் அண்ணா திமுக ஒரு எளிமையின் இலக்கணம் என தெரிவித்தார்.

வைகைச்செல்வனின் இந்த விளக்கத்தை எதிர்கட்சியினர் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர். அரசியலில்  இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டமணி சொல்வது போல அதிமுக முக்கிய நிர்வாகி சொல்வது அந்த கட்சியை அழித்து விடும் என விமர்சனம் செய்து வருகின்றனர்.