அகமதாபாத்தில் உள்ள சாலையில் ஒருவர் காரை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஸ்டன்ட் செய்வதற்காக தன்னுடைய மொபைல் போனில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு காரை இயக்கினார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைக்கு அருகிலிருந்த கால்வாயில் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி, “ஆன்லைனில் கிடைக்கும் புகழுக்காக எடுக்கப்படும் முயற்சிகள் ஆபத்தானதாக முடிகிறது” என்று பல விவாதங்களை எழுப்பி உள்ளது.

புகழுக்காக செய்யும் இதுபோன்ற செயல்களால் பலர் தங்கள் உயிரை இழப்பதோடு பிறரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். இன்று இளைஞர்கள் பலர் இரு சக்கர வாகனங்களில் நின்று சாகசம் செய்வது, மலை சிகரங்களில் நின்று கொண்டு ரீல்ஸ் போடுவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தினசரி நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் காரில் ஸ்டன்ட் செய்து கால்வாயில் விழுந்த இந்த சம்பவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிடப்பட்ட நிலையில், பயனர்கள் பலரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் .