இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விடுகின்றனர். அந்த வகையில், தனது வீட்டு மொட்டை மாடியில் ஒரு இளைஞர் செய்த விபரீத ‘எக்ஸ்பெரிமென்ட்’ அவருக்குத் தரமான பாடத்தைக் கற்பித்துள்ளது.

அந்த இளைஞர் ஒரு பெரிய சுத்துலி பாம் மற்றும் ஒரு ஸ்டீல் கிளாஸுடன் மொட்டை மாடிக்கு வருகிறார். கேமராவை சரியாக செட் செய்துவிட்டு, சுத்துலி பாமுக்குத் தீ வைத்து அதன் மேல் அந்த ஸ்டீல் கிளாஸை மூடி வைக்கிறார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, அந்த இளைஞர் ஓவர் கான்பிடன்ஸுடன் அந்த கிளாஸின் மீதே ஏறி நிற்கிறார்.

 

அடுத்த சில நொடிகளில் அந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடிக்கிறது. வெடித்த வேகத்தில் அந்த ஸ்டீல் கிளாஸ் ராக்கெட் வேகத்தில் மேலெழும்பி, அந்த இளைஞரின் இடுப்புப் பகுதியில் பலமாகத் தாக்குகிறது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அந்த இளைஞர் வலியால் அலறிக்கொண்டு பின்வாங்குகிறார்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் கேமராவில் அப்படியே பதிவாகி, இப்போது ‘எக்ஸ்’ தளத்தில் ‘கர் கே கிளேஷ்’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. “நல்லா வேணும்.. பட்டாசு கூடவா இப்படி விளையாடுவீங்க?” என நெட்டிசன்கள் ஒருபுறம் கிண்டல் செய்தாலும், இது போன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் எனப் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

வலியால் அந்த இளைஞர் துடிக்கும் விதம் பார்ப்பதற்குச் சிரிப்பை வரவழைத்தாலும், அது ஒரு பாடமாகவே அமைந்துள்ளது.