மேகாலயா மாநிலத்தில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் அப்பரீன் லன்டோ நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6-வது இடத்தை பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களிலேயே இங்குதான் எச் ஐ வி பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். எனவே திருமணத்திற்கு முன்பு எச்ஐவி பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

கோவாவில் இந்த சோதனையை கட்டாயமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமும் ஏன் அதை சட்டமாக்க கூடாது. இது சமுதாயத்துக்கு பெரும் பயன் தரும் என்று தெரிவித்தார். முன்னதாக மாநில துணை முதல் மந்திரி தலைமையில் நடந்த எம்எல்ஏ கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது எய்ட்ஸ் சோதனையை கட்டாயமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.