பிரபலமான கிரிக்கெட் வீரர் கங்குலி. இவருடைய வாழ்க்கையை படமாக்குவதற்கு தற்போது முயற்சிகள் நடந்து வருகிறது. தன்னுடைய வாழ்க்கை படத்தை எடுப்பதற்கு தான் அனுமதி கொடுத்து விட்டதாக ஏற்கனவே கங்குலி கூறியிருந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் கங்குலி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரன்பீர் கபூரிடம் நீங்கள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரன்பீர் கூறியதாவது, கங்குலி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்படும் மாபெரும் லெஜன்ட். அவருடைய வாழ்க்கையை படமாக எடுப்பது மிகவும் சிறப்பான விஷயம். ஆனால் என் நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. எனக்காக இயக்குனர்கள் காதல் கதைகளை தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். மேலும் இதன் மூலம் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.