தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சித்தார்த். இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் நடிகர் சித்தார்த் சினிமாவை விட்டு விலகி தொழிலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தெலுங்கில் நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த்  மகாசமுத்திரம் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், தற்போது இருவரும் ஜோடி சேர்ந்து பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வருகிறார்கள்.

இது தொடர்பான புகைப்படங்கள் கூட அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகிறது. நடிகர் சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் நடிகை அதிதி ராவுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியுள்ளது. இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவும் நிலையில் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நடிகை அதிதி மற்றும் சித்தார்த் இணைந்து தற்போது எனிமி திரைப்படத்தில் இடம் பெற்ற மால டம் டம் மஞ்சற டம் டம் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)