அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்..

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. காயத்திலிருந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய பும்ராவிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அயர்லாந்தின் டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய டி20 அணியின் பிளேயிங் லெவன் :

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஜஷ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசீத் கிருஷ்ணா.

அயர்லாந்து டி20 அணியின் பிளேயிங் லெவன் :

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி,  ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், லோர்கன் டக்கர் (WK), மார்க் அடேர், ஜோசுவா லிட்டில், பேரி மெக்கார்த்தி, பெஞ்சமின் ஒயிட், கிரேக் யங்.