பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி அவரது குழந்தைகளுடன் சுனில் ஷெட்டியுடன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட ஆண்டுகளாக இருதரப்பு தொடர் நடக்காமல் இருக்கிறது. இதற்கு காரணம் இருநாட்டு அரசியல் மற்றும் எல்லை பிரச்சினையே.. எனவே இரு நாடுகளும் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றது. எனவே இரு அணிகளும் மோதும் போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதும் ஒரு விருந்து தான். கிரிக்கெட் களத்தில் எதிரியாக இருந்தாலும், இரு அணிகளின் வீரர்களும் போட்டிக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் நன்றாகவே பேசிக் கொள்வார்கள்.

அதாவது, இரு நாட்டு வீரர்களும் மிகவும் நட்புடன் இருக்கிறார்கள். வீரர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலக நட்சத்திரங்களும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் பழங்காலத்திலிருந்தே நட்புறவைப் பேணி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சுனில் ஷெட்டியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியும் சந்தித்ததே இதற்கு சமீபத்திய சான்று.

இருவரும் தற்செயலாக அமெரிக்காவில் நேருக்கு நேர் சந்தித்தனர். இவர்கள் இருவரும் பேசும் காட்சிகள் சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சந்திப்பின்போது அப்ரிடி தனது மகள்களை அழைத்து சுனில் ஷெட்டிக்கு அறிமுகப்படுத்துகிறார். சுனில் ஷெட்டி இருவரின் கன்னங்களையும் அன்புடன் தட்டி பேசி மகிழ்கிறார்..

இந்த வைரல் வீடியோவுக்கு கீழே பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஷாஹித் அப்ரிடி என்னுடைய சிறுவயது ஹீரோ. அவர் மிகவும் அழகான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்’ என்று ஒருவர் எழுதினார். இன்னொருவர், ‘ஒரு உண்மையான ஹீரோ உண்மையான ஹீரோவை சந்திக்கும் போது என குறிப்பிட்டார்.. பலரும் பல விதமான கமெண்ட் செய்து வருகின்றனர்..

இந்தியாவில் அதிகம் பேசப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் அஃப்ரிடியும் ஒருவர். 2023 ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பாகிஸ்தானுக்கு தங்களது அணியை அனுப்ப வேண்டும் என்று அப்ரிடி கடுமையாக கோரியிருந்தார்.  ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த நிலையில், ஆசிய கோப்பை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஹைபிரிட் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆசியக்கோப்பை எப்போது?

ஆசிய கோப்பை 2023 போட்டிகள் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும். இந்த போட்டி 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக 50 ஓவர் வடிவத்தில் நடைபெறுகிறது. மொத்தம் 6 அணிகள் (இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம்) சாம்பியன் பட்டத்துக்காக போட்டியிடும். ஹைபிரிட் மாடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த 13 போட்டிகளில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 2-ம் தேதி முதல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பையில் இந்திய அணி தனது பயணத்தை தொடங்குகிறது.