
ஐபிஎல் 2023 போட்டிகள் மார்ச் 31-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளின் கேப்டன்களும் உறுதியாகியுள்ளனர். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி இருக்கிறார்.
அதன் பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஐடம் மார்க்ராம் இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு மோகனும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக பாஃப் டு பிளெசிஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் இருக்கிறார். மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயரும் இருக்கிறார்கள்.