செப்டம்பர் மாதம் ஐபோன் மொபைல்களுக்கு ஏராளமான ஆபர்கள் காத்திருக்கின்றன. 

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் பணக்காரராக மாற வேண்டும் என்பதை தாண்டி பணக்காரர்களைப் போல் வாழ்வதை அனைவரிடமும் வெளிப்படுத்தவே நினைக்கிறார்கள். அப்படி ஒரு பணக்கார அந்தஸ்தை ஒரு சில பொருட்கள் பிரதிபலிக்கும். அதில் ஐபோன் முக்கியமான ஒன்றாகும். ஒருவர் ஐபோன் வைத்திருந்தாலே அவர் அதிக சம்பளம் வாங்குவதாக, அதிக பணம் கொண்டவராக இச்சமூகத்தில் பார்க்கப்படுகிறார்.

இப்படியான ஐபோன் பிரியர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் ஐபோன் வாங்குவதை அடுத்த  ஒரு மாதம் தள்ளி போடுங்கள். ஏனெனில், ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் நடுவில் தங்களது புது மாடல் ஐபோனை அறிமுகப்படுத்துவார்கள். அப்படி அறிமுகப்படுத்தும் வேலையில்,

அதற்கு முன்பிருந்த ஐபோன் மாடல்களின் விலை  இதுவரையிலான தகவல்களின்படி ரூபாய் 10,000 அளவிற்கு கணிசமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல ஆப்பிள் ஈவென்ட் முடிந்த ஓரிரு வாரங்களில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற பிரபல ஆன்லைன் நிறுவனங்களும் ஐபோன்களுக்கு தாறுமாறான ஆஃபர்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்படி,

இதற்கு முன்பான செப்டம்பர் மாதங்களில் சுமார் 70 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13 ரூ 48,000 என்ற அளவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்தது. அதேபோல இவ்வாண்டும் தாறுமாறான ஆஃபர்களில் குறைந்த விலையில் ஐபோன்கள் விற்க வாய்ப்பு உள்ளதால் ஐபோன் பிரியர்கள் கொஞ்சம் காலதாமதம் செய்து வாங்கினால் குறைந்த விலையில் உங்களுக்கு பிடித்த ஐபோன் மாடலை பெற்றுக் கொள்ளலாம்.