உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரீல்ஸ் மற்றும் ஸ்டோரீஸ் என பல வசதிகள் உள்ளன. இந்த இடையில் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி இரண்டு நொடி வீடியோக்களை notes ஆக பகிரும் புதிய அம்சம் இன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு text மற்றும் பாடல்கள் notes ஆக பகிரப்பட்டு வந்த நிலையில் தற்போது வீடியோ பகிரும் வசதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.