
சென்னை ஆவடியில் ஒரு 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், தன்னுடைய பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் இந்த சிறுமிக்கு சூர்யா என்ற வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர் சிறுமியை சந்திப்பதற்காக பொள்ளாச்சியில் இருந்து நேற்று ஆவடிக்கு வந்தார். அங்கு மாணவியை சந்தித்த அவர், இருசக்கர வாகனத்தில் தாம்பரத்தில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சூர்யா அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி தன் பெற்றோரிடம் நடந்த விபரங்களை கூறினார்.
அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஆவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், அவர்கள் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.