கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 373 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 87 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார். மேலும் துவக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா, கில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இலங்கை அணி தோல்வி அடைந்தாலும் கூட அந்த அணியின் கேப்டன் சானகா 88 பந்துகளில் 108 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் 1:0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 1:30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் இரு அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணியில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக யுஸ்வேந்திர சாஹல் 2வது ஒருநாள் போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல இலங்கை அணியில் நிசாங்கா மற்றும் மதுசங்கா ஆகியோருக்கு பதிலாக நுவனிது பெர்னாண்டோ மற்றும் லகிறு குமாரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்..
இந்தியா ஆடும் லெவன் :
ரோஹித் சர்மா (கே), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்.
இலங்கை ஆடும் லெவன் :
நுவனிது பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்(வி.கீ), அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷானகா (கே), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னே, துனித் வெல்லலகே, கசுன் ரஜிதா, லகிறு குமாரா.