
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி சென்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் உள்ள சென்வெஸ் பார்க் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. ஆட்ட நாயகனாக பார்ஷ்வி சோப்ரா தெரிவானார். 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14.2 ஓவரில் வெற்றி பெற்றது. மீண்டும் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வேதா செஹ்ராவத் 45 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். அதேசமயம் சௌமியா திவாரி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் கேப்டன் ஷெபாலி வர்மாவால் அற்புதமாக விளையாட முடியாமல் போனது, அவரது பேட்டில் 10 ரன்கள் மட்டுமே வந்தது.
டாஸ் இழந்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி மிகவும் மோசமான தொடக்கத்தை பெற்று 5 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டை இழந்தது. இதில் அன்னா பிரவுனிங் (1) சௌமியா திவாரியின் பந்துவீச்சில் மன்னத் காஷ்யப்பிடம் கேட்ச் ஆனார். அதே நேரத்தில், எம்மா மெக்லியோட் 2 ரன்களில் சாதுவால் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

2 விக்கெட்டுகள் சரிந்த பிறகு, ஜார்ஜியா பிலிம்மர் மற்றும் விக்கெட் கீப்பர் இசபெல்லா கேஜ் ஆகியோர் 37 ரன் பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து இன்னிங்ஸைக் கையாள முயன்றனர். ஆனால் கேஜ் ஆட்டமிழந்த பிறகு, மீண்டும் விக்கெட்கள் விழ தொடங்கியது, இது கடைசி ஓவர் வரை தொடர்ந்தது. இதனால் நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பிலிம்மர் 32 பந்துகளைச் சந்தித்து 2 பவுண்டரிகள் உட்பட அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், இசபெல் கேஜ் 4 பவுண்டரிகள் உட்பட 26 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரையும் தவிர கேப்டன் ஈஸி ஷார்ப் (13), கெல்லி நைட் (13 ரன்கள்) மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்ட முடிந்தது.
இந்திய அணி சார்பில் பார்ஷ்வி சோப்ரா 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி.சாது, மன்னத் காஷ்யப், ஷெபாலி வர்மா, அர்ச்சனா தேவி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.மறுபுறம் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. நாளை 29ஆம் தேதி இந்தியா -இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டியில் மோதுகிறது.
#TeamIndia march into the Finals of the #U19T20WorldCup.
They become the first team to reach the finals of the inaugural #U19T20WorldCup 💪💥👏
Way to go #WomenInBlue! pic.twitter.com/4H0ZUpghkA
— BCCI Women (@BCCIWomen) January 27, 2023