முதல் டி20 போட்டியில் இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி அணிவெற்றி பெற்றது. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடந்த ஒரு நாள் தொடரை 3: 0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட் வாஷ் செய்தது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் பங்கேற்றுள்ளது. அதில் முதல் டி20 போட்டி ராஞ்சியில் 7 மணி முதல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் துவக்க வீரர் பின் ஆலன் 35 ரன்களும், மற்றொரு துவக்க வீரர் டெவான் கான்வே 35 பந்துகளில் (7 பவுண்டரி, 1 சிக்ஸர்) 52 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். பின் மார்க் சாப்மேன் டக் அவுட் ஆன நிலையில், கிளென் பிலிப்ஸ் 17 ரன்னில் அவுட் ஆனார். இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்டர் டேரில் மிட்செல் கடைசி வரை அவுட் ஆகாமல் நின்று 30 பந்துகளில் 59 ரன்கள் குவிக்க நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 176ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் துவக்க வீரர்களா களம் இறங்கிய சுப்மன் கில் 7 மற்றும் இஷான் கிஷன் 4 என அடுத்தடுத்து அவுட் ஆக, அதனை தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இந்திய அணி 3.1 ஓவரில் 15/3 என இருந்தது. இதை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்து  அணியை சற்று மீட்டெடுத்த நிலையில், சூர்யகுமார் யாதவ் சொதி வீசிய 12 வது ஓவரில் 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவர் அவுட்டானதை தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும் 13வது ஓவரில் பிரேஸ்வெல் பந்து வீச்சில் 21 ன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் தீபக் ஹூடா ஜோடிசேர்ந்தனர். பின் தீபக் ஹூடா 10, மாவி 2 (ரன் அவுட்), குல்தீப் யாதவ் 0 என அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இருப்பினும் ஒருமுனையில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனியாக போராடினார். கடைசி 2 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட, ஜேக்கப் டஃபி வீசிய  அந்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து போராடினார். 19வது ஓவரில் 17 ரன் கிடைத்தது. கடைசி ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட, பெர்குசன் வீசிய 2வது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்த வாஷிங்டன் சுந்தர் 5வது பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 28 பந்துகளில் (5 பவுண்டரி, 3 சிக்ஸர்) 50 ரன்கள் குவித்தார்.

பின் கடைசி பந்தில் உம்ரான் மாலிக் ஒரு பவுண்டரி அடிக்க, இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணிவெற்றி பெற்றது.   உம்ரான் மாலிக் 4 ரன்னிலும், அர்ஷ்தீப் சிங் விக்கெட் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக பிரேஸ்வெல், சாண்ட்னர், பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சொதி மற்றும் டஃபி ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.