இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 9வது ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள்  டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 2 மணி முதல் விளையாடி வருகிறது. இந்திய அணியில் ரவி அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அதேசமயம் ஆப்கான் அணியில் நவீன் உல் ஹக் இடம்பெற்றுள்ளார்.. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன்  ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் துவக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ரன்களும்,  இப்ராஹிம் சத்ரான் 22 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதையடுத்து வந்த ரஹ்மத் ஷா 16 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஆப்கானிஸ்தான் அணி 13.1வரில் 63 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. அப்போது கேப்டன்ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் ஒமர்சாய் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் பொறுமையாக ஆடி அரை சதம் கடந்தனர். பின் 35 வது ஓவரில் ஒமர்சாய் 69 பந்துகளில் (2 பவுண்டரி, 4 சிக்ஸர்) 62 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 88 பந்துகளில் (8 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) 80 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

இந்த ஜோடி பிரிந்த பின் கடைசியில் வந்த வீரர்கள் (முகமது நபி 19 ரன்கள், நஜிபுல்லா சத்ரான் 2 ரன்கள், ரஷீத் கான் 16 ரன்கள்) யாரும் நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளை விட்டனர். கடைசியாக முஜீப் உர் ரஹ்மான் 10 ரன்களும், நவீன் உல் ஹக் 9 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 என்ற சவாலான ஸ்கோரை எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். மேலும் ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.. இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கி ஆடி வருகிறது.

இந்தியா லெவன் :

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்,

ஆப்கானிஸ்தான் லெவன் :

ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), முகமது நபி,
நஜிபுல்லா சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி