துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கின்றனர். நிலநடுக்கத்தால் சேதம் அடைந்த வெடிப்புகள், மற்றும் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பாகவே துல்லியமாக கணித்தவர் டட்ச் ஆய்வாளர் பிரான்ஸ் ஹுகர்பீட்ஸ். இது தொடர்பாக அவர் போட்ட டுவிட் வைரலானது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தொடங்கி பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளை ஒரு பெரிய பூகம்பம் தாக்கும் என்று ஹுகர்பீட்ஸ் கணித்துள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.