மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தை சேர்ந்த  48 வயதான பஞ்சு வியாபாரிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரது 45 வயது மனைவி தான் தன் சிறுநீரகத்தை தானம் அளித்தார். ஆனால் இருவருமே எச்ஐவி பாதித்தவர்கள் ஆவர். அதோடு மனைவியின் ரத்த வகை பி, கணவரின் ரத்த வகை ஏ ஆகும். இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்னதாக மருத்துவர்கள் குழு பல விஷயங்களை ஆய்வு மேற்கொண்டனர். இறுதியாக கடந்த மாதம் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. எச்ஐவி பாதித்த நபருக்கு சிறுநீரக தானம் பெறப்பட்டு உள்ளது. எனினும் வேறு ரத்த வகையை சேர்ந்தவரிடமிருந்து அல்ல.

நோயாளியின் உடல், சிறுநீரகத்தை ஏற்காமல் போய் விடும் ஆபத்து இருந்ததால், அதற்கான சில சிகிச்சைகளும் முன்கூட்டியே தரப்பட்டது. முன்பே எச்ஐவி பாதித்தவர்களுக்கு எதிர்ப்பாற்றல் குறைவாகத் தான் இருக்கும். அவர்களின் எதிப்பு ஆற்றலை மேலும் குறைக்கும் மருந்துகள் தரப்பட வேண்டும். இதன் காரணமாக அவர்கள் நலமாக இருப்பது அவ்வளவு எளிது அல்ல. இவ்வளவு சவால்களையும் தாண்டி இந்த அறுவை சிகிச்சையானது செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் இருவரும் நன்கு குணமடைந்து விட்டனர். இதற்குரிய செலவுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூபாய்.2 லட்சமும், தன்னார்வலர்களிடமிருந்து ரூ.4 லட்சமும் பெறப்பட்டு அறுவைசிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.