டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், இந்திய அணியின் அதிரடி நாயகன் இஷான் கிஷன் தனது ருத்ரதாண்டவத்தை முடித்துக்கொண்டு ஆட்டமிழந்துள்ளார்.
தொடக்கத்திலேயே அபிஷேக் ஷர்மா ஏமாற்றிய நிலையில், களமிறங்கிய இஷான் கிஷன் வெறும் 40 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் குவித்து பாகிஸ்தான் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார்.
சுமார் 193 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய அவர், சாய்ம் அயூப் வீசிய பந்தில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். அவர் களத்தில் இருந்தவரை ரன் ரேட் மின்னல் வேகத்தில் ஏறிய நிலையில், 8.4 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
பாகிஸ்தான் பவுலர்களைப் பந்தாடிவிட்டு இஷான் கிஷன் வெளியேறியபோது, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் எழுந்து நின்று அவருக்கு உற்சாக மரியாதை அளித்தனர்.
