ஆசிய விளையாட்டில் இந்தியா 100 பதக்கங்கள் வெல்வது உறுதியாகியுள்ளது.

சீனாவின் ஹாங்சோவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்க பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா தற்போது 100 பதக்கங்களை வெல்வது உறுதியாகியுள்ளது. ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை 21 தங்கம், 33 வெள்ளி, 36 வெண்கலம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை 91 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் இந்தியா குறைந்தபட்சம் 9 பதக்கங்கள் வெல்வது உறுதியாகியுள்ளது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக இந்த இலக்கை எட்டியுள்ளது.