இஸ்ரேலின் ஜெருசலேமில் பாலஸ்தீனியர்கள் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிதி எக்கோ பகுதியில் யூத வழிபாட்டு தளம் அருகே நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஏழு இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ஜெருசலேமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம் என பதிவிட்டு இருக்கின்றார்.