ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இதனால் ஐசிசி புள்ளி பட்டியலில் இந்திய அணி 58.8% புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி 66.67 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. SA 55.56 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஸ்ரீலங்கன் 48.48 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் இருக்கிறது. இதில் முதல் 2 இடங்களை பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7-ம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.