விசாகப்பட்டினத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா எழுபத்தி மூன்று பந்துகளில் எழுபத்தி ஐந்து ரன்கள் குவித்து, வெற்றிக்கு உதவினார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு நூற்று ஐம்பத்தைந்து ரன்கள் குவித்து, அதிரடியான தொடக்கம் கொடுத்தார்.
After India’s win in Vizag, the team was celebrating at the hotel by cutting a victory cake. When Jaiswal went to feed the cake to Rohit Sharma, Rohit said, “nahi bhai, me Mota ho jauga vapas”😭❤️
bRO is following a very strict diet.🫡🔥 pic.twitter.com/UGlHGHQdoY
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) December 7, 2025
ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை விளாசி, அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தொடரைக் கைப்பற்ற உதவிய ரோஹித், அப்போட்டியின்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருபதாயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்தச் சாதனையை அடைய அவருக்கு இருபத்தி ஏழு ரன்களே தேவைப்பட்ட நிலையில், கேசவ் மஹாராஜ் பந்துவீச்சில் ஒற்றை ரன் எடுத்து அவர் இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தினார்.
இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோருக்குப் பிறகு, இந்தச் சாதனையை எட்டிய நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மொத்தம் ஐநூற்று ஐந்து போட்டிகளில் விளையாடி இருபதாயிரத்து நாற்பத்தெட்டு ரன்கள் எடுத்துள்ள ரோஹித், அதிக ரன்கள் எடுத்தோர் பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸை முந்திச் சென்றுள்ளார்.
தொடர் வெற்றியைக் கொண்டாடும் விதமாக வீரர்கள் தங்கள் ஹோட்டலில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்திருந்த ஜெய்ஸ்வால், கேக்கை ரோஹித்துக்கு ஊட்ட முற்பட்டபோது, அவர் கேக்கை மறுத்த சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவலானது.
அந்தக் காணொலியில், ரோஹித் சர்மா, “சாப்பிட மாட்டேன், மறுபடியும் குண்டாகிவிடுவேன்” என்று சொல்வது தெளிவாகக் கேட்கிறது. ரோஹித்தின் இந்த வேடிக்கையான எதிர்வினை ரசிகர்களிடையே பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தியது. இது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது, ஏனெனில் இதே கொண்டாட்டத்தின்போது விராட் கோலி கேக்கை சாப்பிட்டார், ஆனால் ரோஹித் மட்டுமே மறுத்துவிட்டார்.
