இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டி20 போட்டி இன்று டிசம்பர் 12ம் தேதி செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் பெரும்பாலான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணியின் தலைமைப் பொறுப்பு சூர்யகுமார் யாதவ் கையில் உள்ளது. அந்த அணியின் துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா தொடருக்கு சுப்மன் கில் திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியா தொடரில் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. எனவேகில் திரும்பிய பிறகு டீம் இந்தியாவின் ஆடும் லெவன் எப்படி இருக்கும்?

தொடக்க ஜோடி இப்படி இருக்கலாம் :

விளையாடும் லெவனில் சுப்மன் கில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகக் கருதப்படுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் அவருடன் ஓப்பனாக வாய்ப்பு பெறலாம். கெய்க்வாட் சிறப்பான ஃபார்மில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சதம் அடித்து 223 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் துவக்க வீரர்களாக இடது மற்றும் வலது கை என  முடிவு செய்யப்பட்டால் ஜெய்ஸ்வால் களமிறங்கவும் வாய்ப்புள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 3வது இடத்தில் வாய்ப்பு பெறலாம். ஷ்ரேயஸ் ஐயர் பெரிய இன்னிங்ஸ் ஆடும் திறமை கொண்டவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் அவர் சிறப்பான அரைசதம் அடித்தார்.

மிடில் ஆர்டர் இப்படி இருக்கலாம் :

கேப்டன் சூர்யகுமார் யாதவ் தானே 4வது இடத்தில் இறங்கலாம். சூர்யகுமார் சில காலம் டி20 கிரிக்கெட்டில் டீம் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் பொறுப்பை ஜிதேஷ் சர்மாவிடம் ஒப்படைக்கலாம். ஃபினிஷர் ரோல் ரிங்கு சிங்குக்கு கொடுக்கலாம். ரிங்கு மற்றும் ஜிதேஷ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அனைவரையும் கவர்ந்தனர். டெத் ஓவர்களில் பெரிய சிக்ஸர்களை அடிப்பதில் ரிங்கு திறமையான வீரர்.

இந்த பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் :

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில், சுழல் துறை பொறுப்பை ரவி பிஷ்னோய் மற்றும் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்கலாம். சிறப்பான பந்துவீச்சுடன், பேட்டிங்கிலும் ஜடேஜா திறமையானவர். முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சு பொறுப்பை ஏற்க முடியும். அவருக்கு ஆதரவாக அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் வாய்ப்பு பெறலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முகேஷ் சிறப்பாக பந்து வீசியிருந்தார்..

 இந்திய அணியின் சாத்தியமான லெவன் :

சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார்.