இந்தியாவுக்கு எதிரான அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமாவுக்கு அணி நிர்வாகம் ஓய்வு அளித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக இருப்பார். டெஸ்ட் தொடரில் மட்டும் தென்னாப்பிரிக்காவை பவுமா வழிநடத்துவார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் பேட்டிங்கில் பவுமாவால் பிரகாசிக்க முடியவில்லை.

இந்தியாவுக்கு எதிரான டி20 அணியிலும் பவுமா இல்லை. அதேபோல 2024 டி20 உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில்,  தென்னாப்பிரிக்கா இந்தியாவை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா அனைத்து முக்கிய வீரர்களுடன் டெஸ்ட் விளையாடும். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் பெடிங்ஹாம் ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார்கள். இந்தியா -தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான தொடர் டிசம்பர் 10ஆம் தேதி டி20 போட்டியுடன் தொடங்குகிறது. இரு அணிகளுக்கிடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. 

தென்னாப்பிரிக்கா டி20 அணி :

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்.

ஒருநாள் அணி :

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியேல் பார்ட்மேன், நான்ட்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹராஜ், மிஹ்லாலி மபோங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென், கைல் வெர்ரைன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்.

டெஸ்ட் அணி :

டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி என்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் கைல் வெர்ரைன்.