விராட் கோலி எடுத்த ரன்களை விட, ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் 6 ரன்கள் மட்டுமே கூடுதலாக எடுத்துள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்த விதம் குறித்து நிறைய எதிர்வினைகள் வருகின்றன. அதேசமயம் பாகிஸ்தானின் பேட்டிங் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார். விராட் கோலி எடுத்த ரன்களை விட, ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் 6 ரன்கள் மட்டுமே கூடுதலாக எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணி பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மழை காரணமாக 2 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. அபார சதம் அடித்த இந்திய அணியின் இந்த வெற்றியில் விராட் கோலியின் பங்களிப்பு அதிகம். அவர் 94 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்து அணியை பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார். விராட் கோலியின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் இது 47வது சதம்.

அதேபோல கேஎல் ராகுல் தனது 6வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.மேலும் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கில் இருவரும் அரைசதமடித்தனர். மறுபுறம் பந்துவீச்சிலும் இந்திய அணியின் குல்தீப் யாதவ் 5விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணியின் வெற்றிக்கு பாராட்டுக்களும், அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விமர்சனமும் வருகிறது.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஃபாலோ-அப்  ஏனெனில் “ஒரு நாள் கிரிக்கெட்டில் நீங்கள் 228 ரன்கள் வெற்றியைப் பதிவு செய்யவில்லை, ஆனால் இந்தியா அதைச் செய்தது. அவர்கள் 356 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை 128 ரன்களில் கட்டுப்படுத்தினர். கோலி மட்டும் 122 ரன்கள் எடுத்தார், ஒட்டுமொத்த அணியும் அவரை விட 6 ரன்கள் மட்டுமே அதிகமாக எடுத்தது.””உண்மை என்னவென்றால், அவர்கள் போட்டியில் முற்றிலும் அழிக்கப்பட்டனர். என் மனதில் 3 வார்த்தைகள் வருகின்றன – அழிவு, இடிப்பு, அழிப்பு. நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அப்படி உணர்ந்தது.” என்றார்.

மேலும் அவர் “மழை நிறைய தடங்கல்களை ஏற்படுத்தியது, ஆனால் ரிசர்வ் நாள் கைக்கு வந்தது. அவர்கள் 10 ஆம் தேதி விட்ட இடத்திலிருந்து கிட்டத்தட்ட 11 ஆம் தேதி தொடங்கியது. 24 ஓவர்கள் வீசப்பட்டு 147 ரன்கள் எடுக்கப்பட்டது. இந்தியா இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது, அதன் பிறகு , அவர்கள் ஒரு விக்கெட் கூட பெறவில்லை. இது ஆச்சரியமாக இருந்தது.”

“பாகிஸ்தானுக்கு சிக்கல்கள் இருந்தன, இன்னிங்ஸ் முடிவதற்குள் அவை பல மடங்கு அதிகரித்தன, ஏனென்றால் ஹரிஸ் ரவுஃப் கிடைக்கவில்லை. 10 ஆம் தேதி அவர் பந்துவீசும்போது அவருக்கு லேசான பக்க ஸ்ட்ரெய்ன் ஏற்பட்டது.  ஒரு பந்து கூட வீசவில்லை, நசீம் ஷாவுக்கு சற்று முன்பு அவர் காயம் அடைந்தார்” என தெரிவித்தார்.