நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை 2.40 லட்சம் கோடி வருமான வரி ரீபண்ட் தொகை செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் செலுத்தப்பட்ட வருமான வரி ரீபண்ட் தொகையை விட இந்த நிதியாண்டு அதிகரித்துள்ளது. நிதியாண்டுக்கு வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த பின்பும் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி தொகையை விட அதிகமாக வருமான வரி செலுத்தி இருந்தால் உங்களுக்கு வருமான வரி ரீபண்ட் செலுத்தப்படுகிறது. இதனையடுத்து உங்களின் வருமான வரி ரிட்டன் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு தகவல் அனுப்பப்பட்ட பின்பே ரீபண்ட் தொகை கிடைக்கிறது.

உங்களுக்கான வருமான வரி ரீபண்ட் நிலவரத்தை பார்ப்பது எப்படி.?

*வருமான வரி இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.

*அதில் இன்கம் டேக்ஸ் ரிட்டன் ஸ்டேட்டஸ் கிளிக் செய்யவும்.

*அதில் உங்களது Acknowledgement number பதிவு செய்து மொபைல் எண் கொடுக்கவும்.

*உங்கள் மொபைலுக்கு வரும் ஆறு இலக்க ஒடிபிஐ பதிவு செய்ய வேண்டும்.

*15 நிமிடங்களுக்கு மட்டுமே ஓடிபி செல்லும்.

*அதன்பின் உங்களது வருமான வரி ரிட்டன் நிலவரத்தை பார்க்க முடியும்.

ரீபண்ட் நிலவரத்தை பார்க்க.

*வருமான வரி இணையதளத்தில் My account செல்ல வேண்டும்.

*அதில் Refund/demand status என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

*அதில் வருமான வரி ரீபண்ட் நிலவரத்தை பார்த்துக் கொள்ளலாம்.